5 மாத குழந்தை புதைக்கப்பட்டு 9 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு

ekuruvi-aiya8-X3
baby-buriedமொண்டானாவின் லொலோ ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பிரான்சிஸ் கார்ல்டன் க்ரொவ்லி(32) என்பவர் ஒரு குழந்தையுடன் வித்தியாசமாக சுற்றி திரிவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
மேலும் அந்த நபர் துப்பாக்கி வைத்து இருப்பதாகவும் பொதுமக்களை மிரட்டி வருவதாகவும் புகார் வந்தது. போலீசார் அந்த இடத்திற்கு வருவதற்குள் கார்ல்டன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். ஆனால் குழந்தை அவரது கையில் காணப்படவில்லை என அங்கிருந்தவர்கள் கூறினர்.
போலீசார் கார்ல்டனை தேடி கைது செய்தனர். ஆனால் அவர்  போதையில் இருந்ததால் குழந்தை  குறித்து தெரியாது என கூறி விட்டான்.  அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் குழந்தையை மலைப்பகுதியில் எங்கோ உயிருடன்  புதைத்து உள்ளதாக கூறினான்.
உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர் ஆனால் குழந்தை புதைத்த இடம் தெரியவில்லை. ஆனால் குழந்தையின் அழுகுரல் கேட்டது. போலீசார் சுமார் 6 மணி நேரம் தேடுதல் வேட்டைநடத்தி   குழந்தை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். குழந்தை குப்பை மற்றும் குச்சிகளின் குவியலுக்கு இடையே புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.  உடனடியாக போலீசார் குழந்தையை மீட்டனர்.
குழந்தை உயிருடன் இருந்தது. குழந்தைக்கு சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு உள்ளது. குழந்தை யாருடையது என்று தெரியவில்லை.  பிரான்சிஸ் கார்ல்டன்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.

Share This Post

Post Comment