எகிப்தில் 3 மாத அவசர நிலை பிரகடனம்

ekuruvi-aiya8-X3

Egypts-Parl-votes-unanimously-in-favour-of-state-ofஎகிப்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகையின்போது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களையடுத்து மூன்று மாதத்திற்கு அவசர நிலை பிரகடனம் செய்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

எகிப்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, டான்டா, அலெக்சாண்ட்ரியா ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசிய அதிபர் அல் சிசி, மூன்று மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுவதற்கு உயர்மட்டக் கவுன்சில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எகிப்து அரசியலமைப்பு சட்டப்படி, ஏதாவது அவசர நிலை பிரகடனத்தை அதிபர் அறிவித்தால், 7 நாட்களுக்குள் நாடாளுமன்றம்தில் மெஜாரிட்டி வாக்குகளுடன் ஒப்புதலைப் பெற வேண்டும். எனவே, மூன்று மாத கால அவசர நிலை பிரகடனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், எதிர்ப்பு எதுவும் இன்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துள்ளதால், 11 ஆம் திகதி முதல் அவசர நிலை நடைமுறைக்கு வந்துள்ளது.

Share This Post

Post Comment