‘அவன்கார்ட்’ இருந்தால் மாலுமிகள் சிக்கியிருக்க மாட்டார்கள்! – நாலக தேரர்

ekuruvi-aiya8-X3

bengamuwe-nalaka-thero-720x480அவன்கார்ட் நிறுவனம் இருந்தால், இலங்கை மாலுமிகள் கடற்கொள்ளையர்களின் கைகளில் சிக்கியிருக்க மாட்டார்கள் என தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனம் சட்டரீதியானதல்ல என உலகத்திற்கு கூறி அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால், இலங்கை கப்பல்களுக்கு மட்டுமல்ல உலகில் எந்த கப்பலுக்கும் கடற்கொள்ளையர்களால் சேதம் ஏற்பட்டிருக்காது எனவும் நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினரை வேட்டையாடும் அரசாங்கத்தின் நடவடிக்கை இன்னும் முடியவில்லை.

பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நெடுந்தீவை காப்பாற்றியமைக்காக தங்க பதக்கம் பெற்ற தம்மிக்க அனில் மாபா என்ற அதிகாரியும் அடங்குகிறார்.

பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி இவர்களை விளக்கமறியலில் வைத்துள்ளனர். தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை நாங்கள் சந்தித்தோம்.

நடராஜா ரவிராஜை கொலை செய்ய கோத்தபாயவே உத்தரவிட்டார் எனக் கூறுமாறு பொலிஸ் அதிகாரிகள் அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்தனராம்.

இந்த பொலிஸ் அதிகாரி கையெழுத்திட்டு கொடுத்த வாக்குமூலம் எங்களிடம் உள்ளது.

குற்றம் செய்யாதவர்களை குற்றம் செய்தவர்களாகவும் குற்றம் செய்தவர்களை குற்றம் செய்யாதவர்களா மாற்றவும் போலி ஆவணங்களை தயாரிக்கவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியாளர்கள் சிறந்த திறமையுள்ளவர்கள் எனவும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பெங்கமுவே நாலக தேரர், மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்சவினருக்கு ஆதரவாக செயற்படும் ஒரு பிக்கு.

போர் காலத்தில் விடுதலைப் புலிகள் குறித்த உளவு பார்க்க தான் உளவு பிரிவு ஒன்றை வைத்திருந்ததாகவும் தற்போதும் அது இயங்கி வருவதாகவும் நாலக தேரர் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தமது புலனாய்வு பிரிவின் மூலம் இராணுவத்தினருக்கு உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Share This Post

Post Comment