அவையவங்களை இழந்த படையினர் போராட்டம்!

Thermo-Care-Heating

armyddddddfதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது அவையவங்களை இழந்துள்ள ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்கள் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செலயகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போரின் போது அவையவங்களை இழந்து நிர்க்கதியாக இருக்கும் தமக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று முற்பகல் திரண்ட ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்கள் அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்றனர்.

எனினும் ஹில்டன் நட்சத்திர விடுதிக்கு அருகிலுள்ள லோட்டஸ் சுற்று வட்டத்தை ஊர்வலம் சென்றடைந்ததும், அதற்கு அப்பால் செல்ல முடியாதவாறு காவல்துறையினர் வீதித் தடையை ஏற்படுத்தினர்.

இதனால் முன்னாள் படைச் சிப்பாய்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் மூண்டது. இதனையடுத்து அங்கவீனமுற்ற படைச் சிப்பாய்களில் ஆறு பேருக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதியின் மேலதிக செயலாளரிடம் கையளித்து, தமது கோரிக்கையை நிறைவெற்றித் தருமாறு வலியுறுத்தினர்.

ideal-image

Share This Post

Post Comment