Tam Sivathasan

 

பெரும் படம் பார்த்தல்

துரும்பரைப்  பற்றி எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது நட்பு வட்டம் சுருங்கிக்கொண்டு போகிறது என்பதை ஒத்துக்கொண்டே  ஆகவேண்டும் . துரும்பர் விடயத்தில் எனது பார்வை, அவதானிப்பு, நோக்கம் என்பன பற்றிய ஒரு சிறு அரும்பட விளக்கம் தான் இக் கட்டுரை. வெள்ளை ஆண்  வர்க்கம்  ஆள்வதற்குத் தகுதியானது என்ற மூர்க்க எண்ணத்தின் அடிப்படையே துரும்பரை இவ்வளவு தூரம் தள்ளிக்கொண்டு வந்தது. ஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் வெள்ளைத் தீவிரவாதியாக மாறியது சந்தர்ப்பவாதமாக இருப்பினும் அது ஒரு விபத்தல்ல. வெள்ளைத் தீவிரவாதம் நீண்டகாலமாக வெந்துகொண்டிருந்த ஒரு எரிமலை. புகையும் தருணத்தில் துரும்பர் அதைத் தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வியாபாரி. வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாதிகள். சரியான சந்தர்ப்பங்களைத் தேர்ந்தெடுப்பவனே வெற்றி பெறுபவன். துரும்பர் வியாபாரத்தில் பெற்ற வெற்றியை அரசியலிலும் பெற முனைகிறார்.   இந்த இடைவெளியில் உலக ஒழுங்கு அமெரிக்க கட்டுப்பாட்டிலிருந்து வெளியேRead More


இவரும் அவர் தானா?

எதிரிகளால் வரும் ஆபத்துக்களை விட எதிர்பாராமல் நண்பர்களிடமிருந்துவரும் ஆபத்துக்களே அதிகம் என்று பலரும் பலதடவைகள் அனுபவித்து எழுதியிருக்கிறார்கள்.இதில் அழுது கொட்டுவதற்கு எதுவுமில்லை. அரசியலில்  இது இன்னும் மோசம்.  உண்மையில் அரசியல்வாதிகள்  மட்டும் தான் உலகத்திலேயே தங்கள் தேவைகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் கட்சி, மத, இனவேறு பாடுகளின்றி ஒற்றுமையாகச் செயற்படுபவர்கள் (உதாரணம்தமக்குத்தாமேசம்பளஉயர்வுகொடுத்துத்தள்ளுவது). இதில் ஆச்சரியம் என்னவென்றால் இடதுசாரி வலதுசாரி நடுவிலான் என்றெல்லாம் கோஷங்களோடும் கொள்கை முழக்கங்களோடும் ஊர்வலம் வந்து அப்பாவிமக்களை நம்பவைத்து ஆசனத்தில் அமர்ந்தவுடன் – யார் நீ ,எதற்கும் அலுவலகத்தில் மனுவைக் கொடுத்துவிட்டுப் போபின்னர் பார்க்கலாம்– என்ற சுபாவம் வந்து தொலைத்து விடுகிறது. இது நம்மசமூகத்தில் மட்டும் நடைபெறுவதல்ல  என்பதுகொஞ்சம் ஆறுதலாகவிருக்கலாம். தென்நாட்டில் துரும்பர் அவதாரம் எடுக்கப்போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிடட நிலையில் நம்மநாட்டில் ‘இது 2016′ என்று நாமம் போட்டுக் கொண்டு வந்த இளவரசர் சமீபத்தில் போட்ட குண்டுRead More


செவ்வாற்றுக் கடமை

இந்த மாதம் செவ்வாற்றில் இரண்டு திருவிழாக்கள் கொடியேறின.நான் சொல்வது ஸ்காபரோவின் ரூஜ் றிவர் பகுதியை. (பிரஞ்சு மொழியில் ரூஜ்=சிவப்பு). செவ்வாறு தமிழ்க் கனடியர்களின் தலைநகரம் என்பதில் சந்தேகமில்லை. கனடாவின் மூன்று நிலை அரசியல் கட்சிகளும் , வாதிகளும் இதைத் தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்கின்றன என்று தான் -உங்களைப் போல – நானும் நம்ப விரும்புகிறேன். அதிகம் அரசியல் மயப்படுத்தப்பட்ட தமிழர்கள் வாழும் இடம் செவ்வாறு என்பதால் நடந்த திருவிழாக்கள் பற்றிய விவரணம் தேவையில்லை. எல்லாமே எப்போதோ -திட்டமிட்டப்டி – முடிந்த காரியம். இது தமிழர்களின் வாழிடம். தமிழரே வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் என்பது உண்மையாகிய பின் கட்சிக்கா அல்லது வேட்பாளருக்கா வாக்களிப்பது என்ற விவாதம் – தர்க்க ரீதியாக இருப்பினும் – எடுபடாது. இந்த அனுமானத்தில் மூன்று பிரதான கட்சிகளும் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தலாமென்றும் போட்டி இடுபவர்களில்ஜனநாயக முறையில்Read More


துரும்பரின் அவதாரம்

அவர் வருவாரா? வருவார் என்கிறார்கள். உலகத்தில் அதர்மம் ஓங்குகின்றபோது தர்மத்தை நிலை நாட்ட அவர் வருவதுண்டு. உலகில் பல காலங்களில் பலரும் ‘நான் தான் அவர்’என்று கூறி அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இவரும் ஏன் இருக்கக் கூடாது என்ற குதர்க்கத்துடன் ‘அவரின்’ வரவை நான் எதிர்பார்க்கிறேன். ட்ரம்ப். என்பது அவர் பெயர். மரியாதை கருதி அவரைத் துரும்பர் என அழைப்போம். அமெரிக்கா அதர்மர்களின் கைகளில் அகப்பட்டுப் பரிதவிக்கிறது அதைக் காப்பாற்ற வந்திருக்கிறேன் என வந்து குதித்தவர் தான் துரும்பர். அவரால் தான் இந்த நெளிந்த உலகத்தை பென்ட் எடுக்க முடியுமெனஎன்று ஏனோ எனது சூட்சும சரீரம் சொல்கிறது. அதனால்  மெக்சிக்க குடிவரவினர் எல்லாம் காமுகர்கள் என்றோ அல்லது அமெரிக்காவிற்குள் வரும் முஸ்லிம்கள் எல்லோரும் தற்கொலைதாரிகள் என்றோ நானும் ஏற்றுக் கொண்டதாகக் கருதிவிட வேண்டாம். துரும்பர் ஒருRead More