Ramanan Ramanan Santhirasegaramoorthy

 

ரோனிபிளேயர் இயக்கும்; “சல்லிக் காசில் சமாதானம் – இப்போது இலங்கையில்

இலங்கைத் தீவில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கானதீர்வுமுயற்சிகளில் சர்வதேசத்தின் தலையீடுகள் அடிக்கடிநடந்தேறியுள்ளன. திம்புவில் 1985 ஜூலையில் நடைபெற்றசமாதானபேச்சுவார்தைகள் முதல் 2006ம் ஆண்டுஒக்ரோபரில் மகிந்த ராஜபக்சஅரசாங்கத்திற்கும் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஜெனீவாவில் நடைபெற்ற இறுதிப் பேச்சுவார்தைவரைசர்வதேசதலையீட்டுடனானசமாதானமுயற்சிகள் எவையும் தீர்வுகளைபெற்றுத் தரவில்லை. சமாதானமுயற்சிகளின் தோல்விக்குபின்னர் “சர்வதேசம்”ஆயுதமோதல்களைமுடிவிற்குகொண்டுவருவதற்குரியஆதரவை இலங்கைஅரசாங்கத்திற்குவழங்கியதன் மூலம் மூன்றுதசாப்தகாலஆயுதமோதல்களைமுடிவிற்குகொண்டுவந்தது. இந்தசமாதானமுயற்சிகளில் சிலதனிநபர்களின் முக்கியத்துவம் கூடுதல் கவனிப்பைபெற்றிருந்தது. இந்தியசமாதானமுயற்சிகளில் ஜே.என்.டிக்சிற்,நோர்வேசமாதாமுயற்சிகளில் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் யசூசிஅகாசிஎனநாம் அறிந்த“சமாதானத்” தூதுவர்கள் எவரும் எமக்குசமாதானத்தைபெற்றுத் தரவில்லை. மாறாகஏராளமானசாவினையும் மாறாதவலிகளையுமேஏற்படுத்திவிட்டிருந்தார்கள் என்பதுயாரும் மறுக்கமுடியாதவரலாறு. உலகமயமாதலில் சமாதானமுயற்சிகள் என்பது கூட ஒருவகை“வர்த்தகமாக”மாறிவருகின்றது. குறிப்பாகசமாதானமுயற்சிகளில் அனுசரணைவழங்கும் நாடுகளின் வெளிவிவாகரகொள்கைகளுக்குஅப்பால் அந்தநாடுகளின் பொருளாதாரநலன் சார் விடயங்கள் அதிகமுக்கியத்தும் பெற்றுள்ளதைநாம் அவதானிக்கமுடிகின்றது. இந்தபின்னணியில்பிரித்தானியமுன்னாள் பிரதமர் ரோனிபிளேயரின் இலங்கைக்கான இரண்டுவிஜயங்கள் புதியகேள்விகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்தவாரம் பிரித்தானிபத்திரிகைகளில் ஒருசெய்திஅடிப்பட்டது. றுiனெசரளா ஏநவெரசநள டுவனஇ என்றபிரித்தானியநிறுவனம் அண்மையில் வெளியிட்டஅதன்Read More


” அதற்கு இவர்கள் தேவையில்லை அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை” எஸ் ஆர்

போர் நடக்கலாம். பலர் கொல்லப்படலாம். எனினும் இறுதியில் பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமே பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியும் – தென்னாபிரிக்காவின் தேசிய தலைவர் நெல்சன் மண்டேலா இலங்கையில் கடந்த பல தசாப்பதங்களாக தொடரும் இன முரண்பாட்டிற்கான தீர்வும் இதன் அடிப்படையில் ஏற்படும் என்று பலர் நம்புகின்றார்கள். ஆனால் தென்னாபிரிக்காவில் நிற வெறிக் கொள்கை கொண்ட 10 தலைவர்கள் நீக்கப்பட்டமையை அடுத்தே அங்கு சமாதானம் நிலை பெற்றது.அது போன்ற நிலை இலங்கையில் ஏற்பட வேண்டுமானால் இலங்கை அரசியல் அரசங்கில் இருந்து நூற்றுக் கணக்கானவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம் என்பதை பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை காலம் எமக்கு வழங்கவில்லை. முரண்பட்டு நிற்கின்ற இனங்களிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான சந்தேகங்கள் நீக்கப்படவேண்டும் என்று தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய போராளிகளில் ஒருவரான ஐவர்Read More


அஜித் சபாரட்ணம் என்ற ஒரு தனிநபரின் முகத்திற்காகத் தான் பல லட்சம் அனுசரணையா ? – அஜித் சபாரத்தினம் பதில்

1980 களில் இலங்கையில் தோன்றிய இன மோதல்கள் சிறுபான்மை தமிழ் சமூகத்தை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து வேர் பிடுங்கி வீசத் தொடங்கியது. யுத்தம் தின்ற நிலத்தில் இருந்து கலைந்து போகாத இலட்சியங்களை கனவுகளாக சுமந்தபடி வெளியேறிய தமிழினம் தாம் வந்து வீழ்ந்த மண்ணில் வீரியம் கொண்ட இனமாக எழுச்சி பெற்றது வரலாறு. குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் கனேடிய மண்ணில் தமிழர்களின் சாதனைப் பயணம் இங்குள்ள ஏனைய பலம்பெயர் சமூகத்தின் வளர்ச்சி வேகத்தை விட பலமங்காக பெருகிப் பரவியதை காலம் எடுத்துக் கூறி நிற்கின்றது. தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகாக இருவர் பாராளுமன்றம் சென்றுள்ளார்கள் பல்லாயிரக்கணக்கான துறைசார் நிபுணர்கள் உருவாகி வெற்றிகரமான மனிதர்களாக திகழ்கின்றார்கள், ஆயிரக்கணக்கான வர்த்தக முயற்சிகள், பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் என தமிழர்களின் சாதனைப் பயணம் பல்லின சமூகங்களால் பெருமையோடும் பொறாமையோடும் நோக்கப்படுகின்றது. கனடாவில்Read More