Purujoththaman Thangamayl

 

மடை மாற்றும் தரப்புக்களை உணர்ந்து கொள்ளுதல்!

தமிழ்த் தேசிய அரசியல் களம் வழக்கத்துக்கு மாறாக பரபரப்பும், வேகமும் குறைந்து ஏனோதானோ என்கிற நிலையை வெளிப்படுத்துகின்றது. எவ்வளவு அழுத்தங்கள், மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் களம் தன்னுடைய இயங்குநிலையை ஒரு வகையான கொதிநிலையில் வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். ஆனால், தற்போதையை களம் அவ்வாறான நிலைகளிலிருந்து விலகியிருக்கும் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு எதிரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், புதிதாக கூட்டணி பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கும் ஈபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட அணியும் கூட எந்தவிதமான முன்னோக்கிய அரசியல் நிகழ்ச்சி நிரலையும் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கவில்லை. மாறாக, மதிய உணவுக்குப் பின்னரான மந்தமான தூக்க நிலையில் இருக்கின்றன. அநாவசியமான பரபரப்புக்கள் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் எழுவதும், அடங்குவதும் வழக்கம். ஆனால், இப்போது, அவசியமான பல விடயங்கள் நிகழ்கின்றRead More


தமிழர் அரசியல் ‘குறிக்கோள்களை’ புறந்தள்ளிய யதார்த்த அரசியலுக்குள் செல்லவில்லை!

(புருஜோத்தமன் தங்கமயில் – மதுரி தமிழ்மாறன்) இலங்கை தொடர்பாக தற்சமயம் ஒரு ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ நடவடிக்கையை சர்வதேச சமூகம் கையாள்வதால் உள்நாட்டு/வெளிநாட்டு தமிழ் அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள்/செயற்பாட்டாளர்கள் சந்திக்கும் தேக்க நிலையின் விளைவு பற்றி யோசித்ததன் விளைவாகவே இப்பத்தி. இலங்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடனும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டுப் பங்களிப்புடனும் கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச ஈடுபாட்டுடன் ஒரு உள்நாட்டு விசாரணையே ஒத்துகொள்ளப்படுள்ளது. இதில் சர்வதேச ஈடுபாடு என்பது எந்தளவிலானது என்பது தொடர்பாக தற்போது விவாதங்கள் உள்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. அது மட்டுமின்றி, தற்போதைய அரசாங்கத்தின் ‘உண்மையான குறிக்கோள்’ என்ன என்பது தொடர்பாகவும் (அதற்கு உண்மையிலேயே தேசியப் பிரச்சினையை தீர்பதற்கான அரசியல் விருப்பம் (political will) இருக்கின்றதா?), அப்படியானRead More


ஒரு கூர்வாளின் நிழலில்; தமிழினி முன்வைக்கும் அரசியலும், படிப்பினையும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்கிற நூல் தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும், தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் சற்று கவனம் பெற்றிருக்கின்றது. மூன்று தசாப்த காலம் நீண்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களில், முதன்மைத் தரப்பாக கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த தமிழினி, அந்தப் போராட்டத்தின் சில பக்கங்கள் தொடர்பில் தன்னுடைய எண்ணப்பாடுகளை எழுதும் போது கவனம் பெறுவது இயல்பானது. விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளை அண்மித்துள்ள போதிலும், தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது இன்னமும் புலிகளின் அடிப்படை எண்ணங்களை நோக்கியதாகவே சில தரப்பினரால் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியான நிலையில், சற்று சலசலப்பான உரையாடல்களை தமிழினியின் எழுத்துக்கள் ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.Read More


மாட்டிக்கொண்ட இரா.துரைரத்தினமும், சாட்டை சுற்றியவர்களும்!

ஈழத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும், ‘தினக்கதிர்’ இணையத்தளத்தின் ஆசிரியருமான இரா.துரைரத்தினம் அண்மையில் ‘சாதி’ வசை பொழிந்து சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார். யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாடு விதிகளை கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் விடுத்திருந்தது. இது தொடர்பில் பேஸ்புக்கில் இடம்பெற்ற விமர்சன உரையாடலொன்றின் போது, ஆடைக்கட்டுப்பாட்டிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட இரா.துரைரத்தினம், விவாதத்தின் போக்கில் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான து.ரவிக்குமாரை நோக்கி சாதி வசை பொழிந்தார். புதிய ஆடைக்கட்டுப்பாட்டுக்கு எதிராக எழுந்த கடும் விமர்சனங்களையடுத்து கடந்த வாரத்தின் இறுதி நாட்களிலேயே யாழ். பல்கலைக்கழகம் அதனை மீளப்பெற்றுக் கொண்டுவிட்டது. ஆனால், அதனை முன்னிறுத்திய உரையாடலில் சாதி வசை பொழிந்த இரா.துரைரத்தினத்தின் நிலைமை பேஸ்புக்கில் பெயர் மாற்றி இயங்குமளவுக்கும், பின்னராக பேஸ்புக்கினை விட்டுச் செல்லுமளவுக்கும் ஆகியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலிருந்து இயங்கிய தமிழ் ஊடகவியலாளர்களில்Read More


மைத்திரியின் வருகையும்… கடந்துவிட்ட ஓராண்டும்! -புருஜோத்தமன் தங்கமயில்

பௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் ஆளுகை செலுத்தும் தென்னிலங்கை அரசியல் களம் கவர்ச்சியுள்ள தலைவர்களினாலேயே அதிகமாக வெற்றி கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ என்று அந்த வரிசை நீண்டு செல்கின்றது. சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் முதற்தடவை போட்டியிடும் போது தமிழ், முஸ்லிம் மக்களின் குறிப்பிட்டளவான ஆதரவோடும் பெருவெற்றி பெற்றார். மஹிந்த ராஜபக்ஷவோ தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் வெற்றி பெற்றார். ஆனால், அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான ஜனாதிபதித் தேர்தல்களும், பாராளுமன்ற தேர்தல்களும் முழுவதுமாக பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தின் போக்கில் நிகழ்த்தப்பட்டது. அவர்கள் தங்களை பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தின் தலைவர்களாக நிறுவுவதில் கவனமாக இருந்தார்கள். ஆரம்பத்திலிருந்தே இவர்கள் சிங்கள மக்களினால் தங்களுடைய பெரும் தலைவர்களாக நோக்கப்பட்டவர்கள். ஆனால், தென்னிலங்கை அரசியலில் இரண்டாம் மட்டத் தலைவராக இருந்த ஒருவர்; அரசியல் முன்னிலை உரையாடல்களுக்குள் என்றைக்குமேRead More