Kuru Aravinthan Aravinthan

 

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்..!

கனடிய அரசியலில் தமிழர்களாகிய நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது இப்போது முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய விடையமாக இருக்கின்றது. தேர்தல் முடிந்து முக்கிய கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சி பதவிக்கு வந்திருக்கின்றது. ஐனநாயக நாட்டில் மாற்றங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு கனடா நல்ல உதாரணமாகவும் இருக்கின்றது. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்த பிரதமர் கௌரவ ஸ்ரிபன் காப்பர் அவர்களின் கொன்சவேற்ரிவ் கட்சி இன்று எதிர்க்கட்சியாக மாறிவிட்டது. தற்போதைய பிரதமராக ஜஸ்ரின் ரூடோ (துரளவin வுசரனநயர) அவர்கள் பதவி ஏற்றிருக்கின்றார். முதன் முதலாக ஈழத்தமிழர்கள் பெருமளவில் கப்பலில் வந்து தஞ்சம் கேட்டபோது மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்தவர் அப்போது பிரதமராக இருந்த இவரது தந்தையான பிய ரூடோ ( Pநைசசந வுசரனநயர) அவர்கள் என்பதை ஈழத்தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். கடும் எதிர்ப்புக்கு மத்தியில்Read More