Indran Raveendran

 

“கபாலி” ஒரு ஈழத்தமிழனின் பார்வையில்…

7/30/2016 ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாலேயே மனித வரலாறு முன்னகர்த்தப்பட்டுவருகிறது. அதுதான் வரலாற்றுக்கு அதிக அழகும் கம்பீரமும் சேர்த்திருக்கிறது. இந்த நூற்றாண்டில், உழைக்கும் மக்களை ஒரு கோமாநிலையில் வைத்து அந்த வரலாற்று வடிவை மாற்ற முற்படும் வேலைதான் தீவிரமாக நடக்கிறது. விரைவாக அசுர பலம்பெற்று வரும் முதலாலித்துவத்திற்கும் பலம் குன்றிவரும் சாமாணிய மக்களுக்குமான இறுதி யுத்த காலமே இந்த நூற்றாண்டு எனலாம். அந்தவகையில் இந்த நூற்றாண்டில் வருகின்ற பாதிக்கப்படும் மக்கள் சார்ந்த படைப்புகள் அதிக முக்கியத்துவத்துடன் நோக்கப்படவேண்டியவை. இதில் படைப்பாளிகள் குறிப்பாக இயக்குனர்களின் பங்கு முக்கியமானது. அதேநேரம் சவால்கள் நிறைந்தது. அதில் சமரசம் இல்லாது பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளைச் சொல்வதும் பொருளாதார ரீதியாக பெற்றிபெறுவதும் முக்கியமானவை. இதில் சமரசம் இல்லாமல் படைப்பை உருவாக்குவதும் பொருளாதார ரீதியாக வெற்றிபெறுவதும் ஒன்றுக்கொன்று நேர்எதிரானவை என்பதே யதார்த்தம். இதை எமது படைப்பாளிகள் நிறையவேRead More


வழித்தேங்காய்களும் தெருத்தெய்வங்களும்

“மச்சான் வன்னியிலை போராலை பாதிக்கப்பட்ட கொஞ்ச பிள்ளையளுக்கு படிப்புச் செலவுக்கு உதவிகள் செய்துகொண்டு இருக்கிறன். உன்னாலை முடிஞ்ச உதவி ஏதாவது செய் மச்சான். சனம் எல்லாம் சரியான கஸ்ரப்படுதுகள்..பாவம்.” என்ற வேண்டுகோளை ஏற்று நண்பன் ஒருவன் குறிப்பிட்ட தொகை பணம் அனுப்புகிறார். சில நாட்களில் “போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கினார்” என படங்களுடன் செய்தி வருகிறது. அதில் பணம் அனுப்பியவரின் பெயர் விபரம் எதுவும் இல்லை. தானே தன்னுடைய பணத்தில் வழங்கியதுபோல அந்த ஒருங்கிணைப்பாளர்.? செய்தி வடிவமைத்திருக்கிறார். மீண்டும் இதே போல் வேறு நண்பர்களிடமும் அந்த ஒருங்கிணைப்பாளர் உதவிகேட்கிறார். பின்னர் தான் உதவி வழங்கியதுபோலவே செய்தித்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறார். மேலே சொன்னது ஒரு சிறு உதாரணம். இப்படி உதவி செய்வதும், உதவிக்கு பணம் திரட்டுவதும், பின்னர் அதை தங்கள் சுய இலாபங்களுக்காகRead More


முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு இன்று!

முள்ளிவாய்க்கால்! எப்படி மறப்பது? வெடிகுண்டு கலக்காத மழை கந்தகம் கலக்காத காற்று இரத்தம் கலக்காத தண்ணீர் செத்தவனை புதைக்க சிறு நேரம் தொலைத்தவனை தேட ஒரு பகல் கஞ்சிக்கு ஒருபிடி அரிசி காயத்திற்கு சிறு துளி மருந்து கையெடுத்த தெய்வங்களின் கடைக்கண் பார்வை. அழுவதற்காவது அவகாசம் மனித மிருகங்களில் கொஞ்ச நேயம் இவை எதுவுமே கிடைத்திராத ஒரு நிலத்தின்,காலத்தின் குறியீடு அது. எப்படி மறக்கமுடியும்? முள்ளிவாய்க்கால்! நெருப்பின் மிச்சமிருக்கும் சாம்பல் நிலம் அது. இருள் விலக்கும் எந்தப் பெருவெளிச்சத்திற்கும் பொறியை அங்கிருந்துதான் எடுத்தாளவேண்டும். May 2016 இந்திரன் ரவீந்திரன்


“ராஜீவ் கொலை” அரசியல்

“விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப்பெரிய தவறு ராஜீவ் காந்தியைக் கொன்றதுதான்”  என பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக எரிக்சொல்கெய்ம் தெரிவித்துள்ளார். செய்தவை எல்லாமே சரி என்று ஒரு அமைப்போ ஒரு நாடோ ஒரு தலைவரோ உலகத்தில் இருந்ததும் கிடையாது. இருப்பது சாத்தியமும் இல்லை. இதில் விடுதலைப்புலிகள் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடமுடியாது. ஆனால் ராஜீவ் கொலை விடுதலைப்புலிகள் செய்த தவறு என்று தொடர்ந்து பேசுவது ஒன்றும் தற்செயலாக நடப்பது அல்ல. ஒரு வேளை விடுதலைப்புலிகளே ஏற்றுக்கொண்டாலும் கூட உண்மையில் ராஜீவ் கொலை விடுதலைப்புலிகள் செய்த தவறு என்ற அடிப்படையில் பார்ப்பது பொருத்தமானது அல்ல. காரணம் 1919 ஏப்ரல் 13 அன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் (Amritsar) நகரில் உள்ள யாலியன்வாலா பாக் (Jallianwala Bagh)   என்ற மைதானத்தில் கூட்டம் நடத்திய பொதுசனம்மீது பிரித்தானியாவின் பஞ்சாப் கவர்னர் டயரின் (General R.E.H.Read More


உனக்கென்ன வேண்டும் சொல்லு?

அவரின் பின்புறமிருந்து இரண்டு கைகள் களுத்தை நெரிக்கிறது. அவரின் கன்னத்தை ஒரு முத்தம் ஈரம் செய்கிறது. அவரின் தோள்பட்டை, காதுமடல்கள் எல்லாவற்றையும் ஒரு மூச்சுக்காற்று மெல்லிதாய் சூடேற்றுகிறது. வேலைப்பளு, பொருளாதாரச்சுமை, இன்னும் சில காரணிகள் அவரை வாழ்க்கையின் விரக்தி நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. இது நாள்வரை நிமிர்ந்து நடந்த மனிதர் ஒருவர் இன்று மிகுந்த மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறார். விபரீதமான முடிவெடுக்கும் முயற்சியில் இறங்கியிருந்த அவரின் மூளை இப்போது இயங்குகின்றதா? இல்லையா? என்று தெரியாத நிலையில் உறைந்துபோய் அமர்ந்திருக்கிறார். கழுத்தை இறுக்கிய கைகளும், தோளிலும் காதுமடல்களிலும் பரவிய மூச்சுக்காற்றும், முத்தமும், ஒன்றாய் இரண்டாய் உடைந்துவிழும் வார்த்தைகளும், அவர் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உணர்த்துகிறது. எல்லாமே அர்த்தமற்றதாக தெரிந்த அந்த இறுக்கமான தருணத்தை தகர்த்துப் போடுகிறது அந்தக்கைகளின் செயலும், மூச்சுக்காற்றின் வெப்பமும், முத்தத்தின் ஈரமும், மெல்ல உடைந்து விழும்Read More


“தமிழீழம் சாத்தியமில்லை” ஏன்? – இந்திரன் ரவீந்திரன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். அவர்கள் ஒரு முகவரியற்ற மக்கள் கூட்டம். உலக வரைபடத்தில் தங்களிற்கென்றொரு தேசம் வேண்டும் என்ற பெரும் கனவோடு அலைந்து திரிகிறார்கள்.  ஒரு நாள் ஒரு சூதாட்ட விடுதியில் தியோடர் கெர்சில் (Theodor Herzl) என்பவரின் தலமையில் சில இளைஞர்கள் ஒரு இரகசிய திட்டம் தீட்டுகிறார்கள். யூத தேசிய நிதி (Jewish National Fund) என்ற ஒரு நிதிக்கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். பலஸ்தீன பகுதிகளில் உள்ள வரண்ட நிலங்களை விலைக்கு வாங்குகிறார்கள். யூத தேசிய நிதியம் பாலைவன பூமியில் 250 மில்லியன் மரங்கள், 180 அணைகள், 1000 பசுமைப் பூங்காக்கள் என்ற பெரும் இலக்குநோக்கி வேகமாக இயங்குகிறது. பாலைவனத் தேசம் பசுமைத் தேசமாக மாறுகிறது. சிறிது காலத்தில் வாங்கிய நிலம் எல்லாவற்றையும் இணைக்கிறார்கள். அதுவரை அலட்சியமாக இருந்த பலஸ்தீனியர்களுக்கு அப்போதுதான் புரிகிறது தம் தேசத்தின் நெஞ்சைப்பிளந்துRead More