Pathanjali Anandprasad

 

எலப்புள்ளி தந்த இசைப்புள்ளி – ஆடலுடன் பாடலைக் கேட்டு……..(6)

Bon jour! இந்தத் தொடரை வாசிக்க நேர்ந்த அன்பர்களே….. கடந்த வருடம் அக்டோபர் மாதம் எனது மதிப்பிற்குரிய மெல்லிசை மன்னர் எம். எஸ். வி. ஐயா அவர்களின் மறைவைப்பற்றி என்றுமே மறைந்து போகாத, போகக்கூடாத நினைவுகளை பதிவிட்டிருந்தேன். பிரசுர அவசரங்களில் அதில் பாதி பிரசவமாகாமல் போனது. ”ஈ குருவி” ஆசிரியரின் பெருமனதால் மீண்டும் ஒரு முறை முழுக் கட்டுரையும் வெளிவருகிறது.  நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்…… இந்த இசைஞானி இசையமைத்த பாடல்களில்  ஒரு வரியாவது அதி காலைகளில் உங்கள் அந்தரங்க அன்றாடங்களில்….. பின்னணியில்…… தலையணைக்குள் இருந்து ஒலிக்கவில்லையா? அந்த மாபெரும் கலைஞருக்கு எமது அஞ்சலிகள். மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் மறைந்துபோய் மூன்று மாதங்கள் ஆகிக்கொண்டிருக்கிறது. ‘அ’…வில் ஆரம்பித்து ‘ஃ’…..இல் உயிர்கள் முடிந்தவுடன் மெய்கள் சடலமாகிவிடுகிறது. வாழ்க்கை வட்டம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இந்த வட்டத்திற்குள் மெய் பயணிக்கும் போதில்Read More


ஆடலுடன் பாடலைக் கேட்டு……(7)

Bon jour. ”சங்கீதமானது நிருத்த, கீத, வாத்யம் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மூன்றின் சேர்க்கையே சங்கீதம் என்று ‘இரத்தினாகரம்’ முதலிய நூல்கள் கூறுகின்றன.” ”காற்று, அக்னி இவையிரண்டின் சேர்க்கையே நாதம் எனப்படும். இந்த நாதம் ப்ரணவ ஸ்வரூபமானது. ப்ரணவம் ஓங்கார வடிவமானது. அகர, உகர,மகரம் சேர்ந்தது. இதுவே திரிமூர்த்தி ஸ்வரூபம். அதாவது அகரம் விஷ்னு, உகரம் ப்ரம்மா, மகரம் சிவன்.” இப்படியெல்லாம் என்னுடைய பத்தாவது வயதிலேயே மூளைக்குள் திணிக்கப்பட்டது. பரீட்சைகளின் போது சப்பித் துப்பினேன். சத்தியமாக எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. ப்ரணவப் பொருளை முருகப் பெருமானே நேரில் வந்து விளக்க நான் என்ன தந்தை சிவனா? பத்து வயதில் சுத்தமாய்ப் புரியவில்லை. இருபத்தைந்து வயதில் காற்றும், அக்னியும் சேர்ந்தால் இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை….. என்கிற ‘ப்ரிஸ்டல் சிகரெட்’ டின் விளம்பர வாசகங்களைRead More