ஆஸ்திரேலிய பிரதமர், மந்திரிகளுக்கு இட்ட அதிரடி உத்தரவு

ekuruvi-aiya8-X3

austஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ், தன்னிடம் பத்திரிகை ஆலோசகராக பணியாற்றிய விக்கி கேம்பியன் என்ற பெண்ணுடன் ‘செக்ஸ்’ தொடர்பு வைத்திருந்த சம்பவம், சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

இந்நிலையில், மந்திரிகள் திருமணம் ஆனவராக இருந்தாலும், ஆகாதவராக இருந்தாலும், தங்களது பெண் ஊழியர்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் நேற்று அறிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மந்திரிகளுக்கு அந்தரங்க உரிமை இருந்தபோதிலும், அவர்கள் கண்ணியமாக நடக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும். ஆகவேதான், மந்திரிகளுக்கான நடத்தை விதிமுறைகளில் இந்த தடையை சேர்த்துள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment