உலகின் அதிவேகம் கொண்ட கப்பல் சிறீலங்கா வந்தடைந்தது

ekuruvi-aiya8-X3

al naseerநல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் ரோயல் கடற்படைக்கு சொந்தமான “அல் நாசிர்” கப்பல் சிறீலங்கா வந்தடைந்துள்ளது.

நேற்று (11) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக் கப்பல் உலகின் அதிவேகம் கொண்ட கப்பல்களில் ஒன்றாகும்.

துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பல், சிறீலங்கா கடற்படை மரபுகளிற்கமைய வரவேற்கப்பட்டது.

இக் கப்பல் நாளை வரை குழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என தெரிவிக்கப்படுகின்றது..

குறித்த கப்பலானது முற்றாக அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளமை அதன் விசேட அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment