ஸிம்பாப்வே அதிபர் தான் நிறுவிய கட்சியில் இருந்தே வெளியேற்றப்படுகின்றார்

ekuruvi-aiya8-X3

ZIM-PRESIDENTஸிம்பாப்வே அதிபர் றொபேர்ட் முகாபே பதவி விலக வேண்டும் என்ற கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில், அந்நாட்டு இராணுவத் தலைவரை முகாபே சந்திக்க உள்ளார்.

ஸிம்பாப்வே 1980இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து முகாபே அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். தனது மனைவியும், தன்னைவிட 40 ஆண்டுகள் சிறியவருமான கிரெஸ் முகாபே அடுத்த அதிபராவதற்கு வழி வகுப்பதற்காக, நாட்டின் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வுவாவை கடந்த வாரம் அவர் பதவியிலிருந்து நீக்கினார்.

பதவிக்கான போராட்டத்தால், 37 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டு வந்த முகாபேவுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இராணுவம் ஆட்சியைக் கையில் எடுத்ததைக் கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், முகாபே பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர்.

ஜானு பி.எவ் கட்சியின் பத்தில் ஒன்பது மாநிலக் கிளைகளும் முகாபே பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்நிலையில், முகாபே மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை என தலைநகர் ஹராரேவில் உள்ள பி.பி.ஸி செய்தியாளர் ஆண்ட்ரூ ஹார்டிங் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment