நான் நியமிக்கப்பட்ட அதிகாரி, என்னை ஒன்றும் செய்ய முடியாது: கிரண் பேடி பதிலடி

ekuruvi-aiya8-X3

kirenபுதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு இடையே அதிகார போட்டி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இரண்டு தரப்பினரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதன் உச்சகட்டமாக புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த வெள்ளிக்கிழமை கிரண் பேடிக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கிரண் பேடிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.

இந்நிலையில், நாராயணசாமி அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் நியமிக்கப்பட்ட அதிகாரி, தன்னை ஒற்றும் செய்ய முடியாது என்று ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி, “துணை நிலை ஆளுநருக்கு எல்லா பொறுப்புகளும் உள்ளது. என்னுடைய பணிக்கு உள்ள விதிகளின் படியே பணிகளை மேற்கொண்டு வருகிறேன். நான் துணை நிலை ஆளுநராகவும், நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளேன்.

நான் மக்களின் குறைகளை கவனிக்கிறேன். தேவையான இடங்களுக்கு நேரில் சென்று பார்க்கிறேன். தேவை ஏற்படும் கோப்புகளை பார்வையிடுகிறேன். அனைத்தையும் என்னுடைய பொறுப்புகளுக்கு உட்பட்டே செய்கிறேன்” என்று கூறினார்.

Share This Post

Post Comment