வெங்காய காரக்குழம்பு செய்வது எப்படி?

Facebook Cover V02

venkaya-kuzhambuதேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 10,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
வெந்தயம், கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை 500 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், வெங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.

அடுத்து அதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு, திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

அருமையான வெங்காய காரக்குழம்பு தயார்…

Share This Post

Post Comment