உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக் கீரை சூப்

Facebook Cover V02

vendhaya-keerai-soupதேவையான பொருட்கள் :

வெந்தயக் கீரை – ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
சோள மாவு – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
வெண்ணெய் – சிறிதளவு,
காய்ச்சிய பால் – அரை டம்ளர்,
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.

காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான வெந்தயக் கீரை சூப் தயார்…

Share This Post

Post Comment