இறால் சுரைக்காய் குழம்பு செய்வது எப்படி?

ekuruvi-aiya8-X3

iral_suraiதேவையான பொருட்கள் :

இறால் – கால் கிலோ
சுரைக்காய் – கால் கிலோ
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்லு
வெங்காயம் – 250 கிராம்
தக்காளி – 250 கிராம்
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லி, சுரைக்காய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

அடுத்து அதனுடன் நறுக்கிய சுரைக்காய் மற்றும் இறால் சேர்த்து வதக்கவும்.

பின்பு மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் மிளகுத் தூள் மற்றும் புளிக் கரைசலை சேர்க்கவும். தீயின் அளவை மிதமாக வைத்து கொதிக்க‌ விடவும். கலவை 10 நிமிடம் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி விடவும்.

இறால் சுரைக்காய் குழம்பு தயார்.

Share This Post

Post Comment