விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – எள் பூரண கொழுக்கட்டை

ellu-poorna-kozhukattaiதேவையான பொருட்கள் :

மேல் மாவு செய்ய:

கொழுக்கட்டை மாவு – ஒரு கப்,
தண்ணீர் – ஒன்றே கால் கப்,
உப்பு சிட்டிகை, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

பூரணம் செய்ய :

கறுப்பு எள் – 50 கிராம்,
வெல்லம் – 50 கிராம்,
ஏலக்காய் – 2.

செய்முறை :

தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

எள்ளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து களையவும். பிறகு தட்டில் பரவலாக கொட்டி வெயிலில் காய விடவும். வெறும் வாணலியில் காய்ந்த எள்ளை சேர்த்து வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும். அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம்.

மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

சூப்பரான எள் பூரண கொழுக்கட்டை தயார்…






Related News

  • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
  • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
  • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
  • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
  • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
  • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
  • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
  • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *