கத்திரிக்காய் திரக்கல் சாப்பிட்டிருக்கீங்களா?

ekuruvi-aiya8-X3

thirakkalதேவையானவை: 

கத்திரிக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

அரைக்க: பூண்டு – 5 பல்
காய்ந்த மிளகாய் – 6
தேங்காய் துருவல் – கால் கப்
கசகசா, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: 
கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி… சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

Share This Post

Post Comment