அவல் பொங்கல் செய்வது எப்படி?

ekuruvi-aiya8-X3

aval-pongalதேவையான பொருட்கள் :

அவல் – 2 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
இஞ்சி – 1 துண்டு (நறுக்கவும்)
முந்திரிப்பருப்பு – 5
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4 (நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :

ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி பாசி பருப்பை உதிரியாக வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து அதில் அவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பை கொட்டி கிளற வேண்டும்.

பொங்கல் பதத்துக்கு வந்ததும் அதனுடன் நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கவேண்டும். ருசியான அவல் பொங்கல் தயார்….

Share This Post

Post Comment