ஜவ்வரிசி – உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி?

Facebook Cover V02

jav_katletதேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 4
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கரம் மசாலா தூள் –  அரை டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை :

இரவில் படுக்கும் போதே ஜவ்வரிசியை 3/4 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து, வெந்ததும் தோலுரித்து மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, ஊற வைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கரம் மசாலா தூள், மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து கலந்து வைத்துள்ள கலவையில், ஒரு எலுமிச்சை அளவை எடுத்து, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், தட்டி வைத்துள்ளவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதோ சுவையான ஜவ்வரிசி கட்லெட்  தயார்….

இதனை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Share This Post

Post Comment