வெஜ் பர்கர் செய்வது எப்படி?

Facebook Cover V02

veg_burgerதேவையான பொருட்கள் :

பன் – 2
நறுக்கிய முட்டைக்கோஸ் – 3 டீஸ்பூன்
தக்காளி – 2
வெங்காயம் – 3
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் – 2 துண்டுகள்

உள்ளே வைப்பதற்கு…

காய்கறிகள் – 1 1/2 கப் (2 கேரட், 6 பீன்ஸ் மற்றும் 2 உருளைக்கிழங்கு)
சோம்பு பொடி – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

மற்றொரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

முதலில் காய்கறிகளை நன்கு மென்மையாக வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சோம்பு பொடி சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பிறகு அதில் உப்பு, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி இறக்கி, இரு பாதியாக பிரித்து, கட்லெட் போன்று வட்டமாக தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பன்னை எடுத்து, பக்கவாட்டில் இரண்டாக வெட்டி, அடிப்பாகத்தின் மேல் கட்லெட்டை வைத்து அதன் மேல் சீஸ் துண்டுகளை வைத்து, மேலே சிறிது முட்டைக்கோஸைத் தூவி, பின் வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகளை வைத்து, அதன் மேல் தக்காளி சாஸ் சேர்த்து பன்னின் மறுபாதியை வைத்து பரிமாற வேண்டும். அதேப் போன்று மற்றொரு பன்னையும் செய்தால், சிம்பிளான வெஜ் பர்கர் ரெடி!!!

Share This Post

Post Comment