சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?

தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

மேல் மாவுக்கு:

கோதுமை மாவு – 200 கிராம்
நெய் அல்லது வெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

dal-stuffed-parathaசெய்முறை:

மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.

வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.

பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும்.

தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சூப்பரான தால் ஸ்டஃப்டு பரோட்டா தயார்…..






Related News

  • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
  • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
  • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
  • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
  • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
  • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
  • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
  • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *