சத்தான பிரண்டை சிறுதானிய தோசை செய்வது எப்படி?

Facebook Cover V02

dosai_nava1பிரண்டை பசி உணர்வை தூண்டும், சிறுதானியங்கள் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும். இன்று இரண்டையும் வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – கால் கப்
வரகு அரிசி – கால் கப்
சாமை அரிசி – கால் கப்
தினை அரிசி – கால் கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – சிறிது
நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் – 13
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம், உளுந்தையும் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

பிரண்டையின் ஓரங்களில் உள்ள நரம்பை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

நன்றாக ஆறியவுடன் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வரகு அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை தயார்….

Share This Post

Post Comment