சத்தான ஓட்ஸ் – பனானா பான்கேக் செய்வோமா?

Oats_panana_cakeதேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 1 கப்
கோதுமை மாவு – அரை கப்
வெல்லம் – சுவைக்கு
தேன் – தேவைக்கு
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
பால் – கால் கப்
முட்டை – 2
எண்ணெய் – தேவைக்கு
வாழைப்பழம் – 3 (நன்றாக பழுத்தது)

செய்முறை :

ஓட்ஸை நன்றாக வறுத்து மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.

வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, கரைத்த வெல்லம், முட்டை, பேக்கிங் பவுடர், பால், சேர்த்து நன்றாக மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவு ஒரு கரண்டி எடுத்து சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழ துண்டுகளை அடுக்கவும்.

ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக விடவும். வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து அதல் மேல் தேன் ஊற்றி பரிமாறவும்.

சத்தான ஓட்ஸ் – பனானா பான்கேக் சுவைக்க தயார்….


Related News

 • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
 • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
 • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
 • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
 • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
 • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
 • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
 • விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – எள் பூரண கொழுக்கட்டை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *