அருமையான வாத்துக் கறிக்குழம்பு செய்வோமா?

vathu-kari-kuzhambuவாத்துக்கறி மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது. அதனை தோலுடன்தான் சமைக்கணும். அப்போதான் நல்லாயிருக்கும். சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள் :

வாத்துக்கறி – 1/2 கிலோ
வெங்காயம் – 1
பூண்டு – 10 பற்கள்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாத்துக்கறியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, அத்துடன் வாத்துக்கறியை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி மூடி வைத்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கறியானது நன்கு வெந்து, கிரேவி போன்று சற்று கெட்டியானதும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், வாத்துக்கறி குழம்பு தயார்!


Related News

 • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
 • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
 • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
 • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
 • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
 • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
 • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
 • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *