இஞ்சி ரசம் செய்து சாப்பிடுவோமா?

Ginger_Rasamதேவையான பொருட்கள்

புளி – ஒரு தேசிக்காய் அளவு
தக்காளி – ஒன்று

அரைத்து கொள்ள

இஞ்சி – இரண்டு அங்குல துண்டு
மிளகு – அரை தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
முழு தனியா – ஒரு மேசை கரண்டி
காஞ்ச மிளகாய் – இரண்டு
கொத்துமல்லி தழை – கால் கைபிடி அளவு
கருவேப்பிலை – கால் கைபிடி அளவு

தாளிக்க

நெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி – ஒரு சிட்டிக்கை அளவு

செய்முறை

புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை (வதக்க வேண்டாம்) அரைத்து கொள்ளவும்.

தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

சுவையான கம கம இஞ்சி ரசம் தயார்! செய்து சாப்பிட்டுப் பாருங்கள்…..

குறிப்பு

1. பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.

2. சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளி காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.

3. வீசிங் பிராப்ளம் உள்லவர்களுக்கும் நல்லது. சில குழந்தைகளுக்கு சளி இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாதத்தில் பிசைந்து கொடுக்கலாம்.

4. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் சிறிது குறைத்து கொள்ளலாம். காரம் அதிகம் சாப்பிடுபவர்கள். கூட்டி கொள்ளலாம்.

5. உடல் எடையை குறைக்கவும் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இது குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் ரொம்ப நல்லது.

Share This Post

Post Comment