சுவைமிகுந்த சுருள் போளி செய்வது எப்படி?

Facebook Cover V02

surl_ppliதேவையான பொருட்கள் :

மைதா – ஒரு கப்,
கடலை மாவு – ஒரு கப்,
சர்க்கரை (பொடித்தது) – முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் – கால் கப்,
துருவிய கலர் கொப்பரை – 2 டீஸ்பூன்,
நெய் – 3 டீஸ்பூன்,
எண்ணெய் – கால் கிலோ,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை :

கடலை மாவை நெய்யில் சிவக்க வறுத்து அதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து பூரணம் தயாரித்து வைக்கவும்.

மைதாவை உப்பு, தேவையான நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பிசைத்து வைத்த மாவை மெல்லிய, சற்றே பெரிய பூரி போல் தோய்த்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிறுதீயில் வைத்து, பூரிபோல் இட்டு வைத்ததை போட்டு பாதி வேகவிட்டு (மொறுமொறு என்று ஆகிவிடாமல்) எடுத்து, சூட்டோடு இருக்கும்போதே அதன் நடுவில் பூரணம் தூவி, உடனே பாய் போல் சுருட்டி, மேலே கலர் கொப்பரை தூவி பரிமாறவும்.

சூப்பரான சுருள் போளி தயார். . .

Share This Post

Post Comment