சூப்பரான ஆட்டு மூளை பொரியல்

Brain-Fryதேவையான பொருள்கள்:

ஆட்டு மூளை – 2
மிளகாய்தூள் – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
ப.மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயம் – 1
வெங்காயம் – 1/2 கப்
சோம்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் ஊற்றி மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம்.ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

மசாலா அனைத்து ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம். சூப்பரான ஆட்டு மூளை பொரியல் தயார்…






Related News

  • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
  • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
  • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
  • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
  • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
  • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
  • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
  • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *