ஃபிஷ் பெப்பர் மசாலா செய்வது எப்படி?

sdsd

fmasalaதேவையான பொருட்கள் :

நெய் மீன் – 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் – 20,
பூண்டு – 5 பல்,
பச்சைமிளகாய் – 3,
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
முதல் தேங்காய்ப்பால் – 1 கப்,
கோகம் புளி – 2 துண்டுகள்,
உப்பு, கறிவேப்பிலை – தேவைக்கு.

செய்முறை :

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், மிளகு, தனியாத்தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன், அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிரட்டவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, கோகம் புளியை போட்டு அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

கிரேவி திக்காக வரும்வரை கொதிக்கவிட்டு, தேங்காய்ப்பால், கறிவேப்பிலையும் சேர்த்து சிம்மில் வேக விடவும். நன்கு கொதித்து மீன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

சூப்பரான சைடிஷ் ஃபிஷ் பெப்பர் மசாலா தயார்…

எந்த மீனிலும் இந்த மசாலாவை செய்யலாம்.

Share This Post

Post Comment