சுவையான வாழைப்பூ அடை செய்வோமா?

ekuruvi-aiya8-X3

vahai_adaiதேவையான பொருட்கள் :

வெங்காயம் – 2
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் – 3 பத்தை
எண்ணெய் – தேவையானஅளவு

அரைக்க :

வாழைப்பூ – ஒன்று (சிறியது)
புழுங்கல் அரிசி – அரை கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 5
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக்கொள்ளவும்.

புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் மூன்று மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும். வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வாழைப்பூவை போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.

ஊற வைத்த அரிசி, பருப்புக் கலவையை கிரைண்டரில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். மாவை அரைத்தவுடன் ஊற்றலாம். புளிக்க வைக்க வேண்டியதில்லை.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, வதக்கிய வாழைப்பூ, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், துருவிய தேங்காய் சேர்த்துக் கலக்கவும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், மாவெடுத்து ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

சுவையான வாழைப்பூ அடை தயார்….

Share This Post

Post Comment