பிரட் பஜ்ஜி செய்து பார்க்கலாம் வாங்க…

ekuruvi-aiya8-X3

Bread_bajjiபிரட் ஸலைஸ் = 10 துண்டுகள்
கீரின் சட்னி = பிரட்டில் தடவ தேவையான அளவு

கெட்சப் = பிரட்டில் தடவ தேவையான அளவு

பஜ்ஜி மாவு

கடலை மாவு = ஒரு கப்
பொட்டு கடலை பொடி = ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
ரெட் கலர் பொடி = இரன்டு பின்ச்
சோம்பு தூள் = முக்கால் பதம் பொடித்தது
கருவேப்பிலை = ஒரு மேசை கரண்டி பொடியாக நறுக்கியது
துருவிய இஞ்சி = ஒரு தேக்கரண்டி

முதலில் பிரெட் ஸ்லைஸை முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும்.கீரின் சட்னி புளி சேர்க்காமல் லெமென் சேர்த்து தயாரித்து கொள்ளவும்.

கிரின் சட்னி

கருவேப்பிலை புதினா கொத்து மல்லி ஒரு கப் மண்ணில்லாமல் ஆய்ந்து பொடியாக சாப் செய்து அத்துட‌ன் இஞ்சி ஒரு துண்டு, ப‌ச்ச‌மிள‌காய் ஒன்று, சின்ன‌ வெங்காய‌ம் முன்று, உப்பு சிறிது எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து அரைத்து கொள்ள‌வும்.

கெட்சப்பையும் தயாராக வைக்கவும்.

பஜ்ஜி மாவில் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து கரைத்து கொள்ளவும், அதில் பொடியாக அரிந்த கருவேப்பிலையும் சேர்த்து கொள்ளவும்.

ஒரு பிரெட்டின் ஒரு பக்கம் கெட்சப்பையும், இன்னொரு பிரெட்டில் கிரீன் சட்னியையும் தடவி முடி பிறகு பஜ்ஜி மாவு கலவையில் தோய்த்து எண்ணையை காய வைத்து பொரித்து எடுக்கவும்

குறிப்பு

பிரெட் பஜ்ஜி எண்ணை கூட அவ்வளவா குடிக்காது, இப்படி ஸ்டப் செய்து பொரித்து சாப்பிடுவதால் புளிப்பு, இனிப்பு, காரம் என்று கூடுதல் சுவை.

சுவையான மாலை நேர டிபன் ரெடி.

Share This Post

Post Comment