குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் – கால் கப்,
கோதுமை பிரெட் – 10 துண்டுகள்,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி – ஒன்று,
வெங்காயம் – ஒன்று,
இஞ்சி – ஒரு சிறு துண்டு,
பச்சை மிளகாய் – 2,
கேரட் – 1 சிறியது,
குடைமிளகாய் – பாதி,
தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
சீஸ் துருவல் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

cheese-noodles
செய்முறை :

வெங்காயம், தக்காளி, இஞ்சி, குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

காய்கறி வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்துக் கலக்கவும். அடுத்து அதில் தக்காளி சாஸ் விட்டு கலக்கவும். ஒரு ஸ்லைஸ் பிரெட் எடுத்து அதன் நடுவில், 2 டேபிள்ஸ்பூன் அளவு நூடுல்ஸ் கலவையை பரவலாக வைத்து, அதன் மேல் சீஸ் தூவி, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும்.






Related News

  • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
  • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
  • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
  • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
  • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
  • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
  • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
  • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *