சிறுநீரக கோளாறால் ஜெட்லி பாதிப்பு

Facebook Cover V02

arun_jetleyமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, 65, நிதியமைச்சராக, 2014ல், பொறுப்பேற்றபின், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்காக தனியார் மருத்துவமனையிலும், அதன்பின், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.

ஜெட்லியின் ராஜ்யசபா, எம்.பி., பதவிக்காலம் முடிந்ததையடுத்து, உ.பி., மாநிலத்திலிருந்து, ராஜ்யசபாவுக்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை, ராஜ்யசபா அவை தலைவராக, பா.ஜ., மீண்டும் நியமித்தது. ஆனாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் இன்னும், எம்.பி.,யாக பதவியேற்கவில்லை.

ஜெட்லியை பரிசோதித்த, எய்ம்ஸ் மருத்துவைமனை டாக்டர்கள், அவர், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ‘நோய் தொற்று ஏற்படும் என்பதால் வெளியில் செல்ல வேண்டாம்’ என, ஜெட்லியிடம், டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, வீட்டிலிருந்தபடி பணிகளை கவனித்து வருகிறார்.

‘ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதனால், வீட்டிலேயே அவருக்கு சிகிச்சையளித்து வருகிறோம்’ என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment