அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் – இன்டர்போல் பொலிஸார் தெரிவிப்பு

ekuruvi-aiya8-X3

arjunaமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்டர்போல் பொலிஸாரின் சிங்கப்பூர் கிளை அதிகாரிகள், இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவித்தள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (24) தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாக சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share This Post

Post Comment