பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?

sdsd

plastic-rice-import-china-660x320பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்க எளிய வழிகள் வருமாறு:-

* அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட வேண்டும். போட்டவுடன் அது மிதந்தால் பிளாஸ்டிக் அரிசி. இல்லை என்றால் அது நல்ல அரிசியாகும்.

* அரிசியை தீப்பெட்டியால் கொளுத்திப் பார்க்க வேண்டும். அப்போது பிளாஸ்டிக் வாடை வந்தால் அது பிளாஸ்டிக் அரிசி என்பதை கண்டுபிடித்து விடலாம்.

* வடித்த சாதத்தை 3 அல்லது 4 நாட்கள் வைத்திருக்க வேண்டும். அதில் பூஞ்சை வராவிட்டால் அது பிளாஸ்டிக் அரிசியாகும். பூஞ்சை வந்தால் அது நல்ல அரிசியாகும்.

* சட்டியில் எண்ணெயை காயவைத்து அதில் சிறிது அரிசியை போட்டால் பொரியும். அப்படி பொரிந்தால் அது நல்ல அரிசி. பொரியாமல் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டால் அது பிளாஸ்டிக் அரிசியாகும்.

* தண்ணீரில் போட்டு அரிசியை கொதிக்க வைத்தால் மேலே வெண்படலம் போல் ஒட்டிக் கொண்டு பிளாஸ்டிக் வாடை வந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாகும். நன்றாக கொதித்து நுரை வந்தால் அது நல்ல அரிசியாகும்.

* கிரைண்டரில் மாவு அரைக்கும்போது மாவு வெள்ளையாக வந்தால் அது நல்ல அரிசி. மஞ்சள் நிறத்தில் வந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாகும்.

பிளாஸ்டிக் பொருட்களானது மக்காத தன்மை கொண்டது. மண்ணில் மக்காத ஒரு பொருளை உடலில் உள்ள ஜீரண உறுப்புகள் எவ்வாறு செரிமானம் செய்யும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் சர்க்கரை, பிளாஸ்டிக் முட்டைகோஸ் ஆகியவற்றை சாப்பிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய் வரும். வயிற்றுவலியும், செரிமான கோளாறுகளும் ஏற்படும்.

சிலருக்கு வாந்தி மயக்கமும் ஏற்படும். புற்றுநோய், சிறுநீரக கோளாறு, மாரடைப்பு, ரத்தக்குழாய் வெடிப்பு போன்ற அபாயகரமான நோய்களும் ஏற்படும்.

Share This Post

Post Comment