ஐநாவில் தற்காலிக அறிக்கையை சமர்ப்பித்தது இலங்கை!

Facebook Cover V02

human-rightsஇலங்கை வெளிவிவகார அமைச்சரினால் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான தற்காலிக அறிக்கை இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில் காணாமல் போனோர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 ஆவது கூட்டத்தொடர் அண்மையில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கைப் விஜயம் தொடர்பில் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஐநாவின் அமர்வுகளில் கலந்துகொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான ஆரம்ப கட்ட தற்காலிக நகர்வு தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

Share This Post

Post Comment