அரசியலில் நான் சீனியர், ரஜினி, கமல் ஜூனியர் – விஜயகாந்த்

Facebook Cover V02

vijaykantஅரசியலில் நான் சீனியர், ரஜினி, கமல் ஜூனியர். அவர்கள் அரசியலில் இறங்கி பார்க்கட்டும். ஆண்டாள் அருளால் ஆட்சியை பிடிப்பேன்,” என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சியினருடன் வந்த விஜயகாந்த், வருஷாபிஷேக பந்தலில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார் முன் அர்ச்சனை செய்தனர்.

கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்தபின் பத்திரிக்கையாளர்களிடம் விஜயகாந்த் பேசியதாவது;

கடந்த முறை ஆண்டாளை வணங்கியதால், எதிர்கட்சி தலைவர் ஆனேன். என் தாயார் ஆண்டாள். என் தாயார் பெயரும் ஆண்டாள். ஆண்டாளை வணங்கினால் ஆட்சியை பிடிப்பேன்.

வைரமுத்துக்கு எதிரான போராட்டத்தை தே.மு.தி.க., ஆதரிக்கும். உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. தனித்து போட்டியிடுவோம். தெய்வம் என் பக்கம் இருக்கிறது. எம்.எல்.ஏ., சம்பளம் வேண்டாம் என சொல்லும் தினகரன், மிடாஸ் மது ஆலையை மூடுவாரா.

மாநில அரசை மத்திய அரசு தான் இயக்குகிறது என்பதே உண்மை. இரு அரசுகளும் பயனற்றவை. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசு தரவேண்டும். அரசியலில் ரஜினி, கமல் இறங்கட்டும். இறங்கி பார்க்கட்டும். சினிமாவில் அவர்கள் சீனியராக இருந்தாலும், அரசியலில் நான் தான் சீனியர். அவர்கள் ஜூனியர், என்றார்.

Share This Post

Post Comment