அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் பதவி விபரம் இதே!

Thermo-Care-Heating

parliment87866565புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்குடன் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக உருவாக்கியதன் பின்னர், இன்று முதல் முறையாக கூடியுள்ள அச் சபையில் ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுவதோடு, செல்வம் அடைக்கலநாதன், திலங்க சுமதிபால, கபீர் கசீம், சுதர்ஷனி பிரணாந்து பிள்ளை, திலக் மாரப்பன, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 21 உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment