அரசியல் கைதிகள், காணாமல்போனோர் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

ekuruvi-aiya8-X3

tnaஅரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் நடாளுமன்றில் கடந்த செவ்வாய்க் கிழமை முன்வைத்தார்.

இதன்போது உரையாற்றிய சம்பந்தன் அவர்கள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவருக்கும் சட்டத்திற்குட்பட்ட வகையில் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டுமெனவும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல்போனோர் தொடர்பில் நீண்ட விளக்கமளித்த சம்பந்தன் ஐ.நா. மற்றும் சர்வதேசச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி இலங்கையில் காணாமல்போனோர் மற்றும் அவர்களது குடும்பங்கள் படும் துன்பங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிதாதன் கருத்துத் தெரிவிக்கும்போது,

தமிழ் அரசியல் கைதிகள், காணாமல் போனோர் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், சில காலங்களிற்கு முன்னர் வழக்குத் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோதிலும் அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்துகொண்டிருக் கின்றது.

இவ்வாறு நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளின்போது விடுதலை செய்யப்பட்ட 19 பேருக்கு ஒரு வருட புனர்வாழ்விற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு மூன்று பேரே நீதிமன்ற உத்தரவினை ஏற்றுக்கொண்டதாகவும் ஏனைய பதினாறுபேரும் தாம் குற்றமற்றவர்கள் என மறுப்புத் தெரிவித்து இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மறுப்புத் தெரிவிப்பவர்கள் மீண்டும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment