அரசியல் சாசனம் குறித்த இறுதி அறிக்கை ஏப்ரல் மாதம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது

ekuruvi-aiya8-X3

maithiri24அரசியல் சாசனம் குறித்த இறுதி அறிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கொழும்பு மக்கள் கருத்துக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாக, அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

5ம் திகதி முதல் 7ம் திகதி வரையில் மீளவும் கொழும்பு மக்கள் கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் மக்களது கருத்துக்களை பெற்றுக் கொண்டு இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment