ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் என்பது எனது கருத்து: டி.டி.வி தினகரன்

Thermo-Care-Heating

TTV-Dinakaran-says-Rajinikanth-நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆன்மீக அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன், ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் என்று கூறியுள்ளார். கண்மூடித்தனமாக எதையும் எதிர்ப்பது எனது குணம் அல்ல. அவர் அரசியலில் இறங்கியுள்ளது வரவேற்க்கத்தக்கது.

ஆர்.கே நகர் மக்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்

ideal-image

Share This Post

Post Comment