அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்கள் மதம் சார்ந்த அடையாளத்தைக் காட்டுக்கின்றனர்!

ekuruvi-aiya8-X3

wikneshwaranஇலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்ந்து இருக்கின்றபோதிலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி .விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டினால் மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் முத்தமிழ் கலைநிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘எந்தவொரு இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் கலை, கலாசாரம், இலக்கியம் அனைத்திற்கும் அடி நாதமாக விளங்குவது அவர்களின் தாய் மொழி தான். தமிழர் என்றாலும் சரி, சிங்களவர்கள் என்றாலும் சரி, மொழிதான் அந்த இனங்களின் பாரம்பரிய வடிவமாக அமைகிறது.

முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது அடையாளம் மொழியில்லை, மதம் எனச் சொல்லுகின்றனர். கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தமிழ் மொழியில் கதைத்து, தமிழ் மொழியில் கவிதைகள் எழுதிப் பாடும்போது அவர்களின் கலை அடையாளமும் மொழி சார்ந்தது என்று சொல்லத் தோன்றுகின்றது.

மொழி பேசக் கற்றுக்கொண்டபின்னர் தான் நாம் மதத்தை அறிந்துகொண்டோம். இந்நிலையில் முஸ்லிம் சகோதரர்களும் அடிப்படையில் தமிழ் மொழி சார்புள்ளவர்கள்தான். தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்” என்றார்.

Share This Post

Post Comment