அரசாங்கம் IMFல் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுக்கொள்ள உள்ளது

ekuruvi-aiya8-X3

imfஇலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்றுக்கொள்ள உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி ஒதுக்கத்தை தக்க வைத்துக் கொள்ளவும், நிலுவைக் கொடுப்பனவுகளை செலுத்தவும் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவே அரசாங்கம் திட்டமிட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment