அரசாங்க பணத்தில் உல்லாசம் – பிடிபட்டார் ஹெல்த் கனடா ஊழியர் !! ekuruvi Night Apr 3,2016

Thermo-Care-Heating

தன்னுடைய சுய தேவைகளுக்காக அரசாங்கத்தின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஸ்பா , ரெஸ்டாரன்ட் , ஆடம்பர துணிமணிகள், முன்பணம் ஆகியவற்றை செலுத்தி மகிழ்ந்த ஹெல்த் கனடா ஊழியர் ஒருவர் பிடிபட்டுள்ளார். $20,000 தொகையை அந்த நபர் இது வரையிலும் அரசாங்க கணக்கிலிருந்து பயன்படுத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் மீது நம்பிக்கை வைத்திருந்த உடன் பணியாற்றும் ஊழியர்களிடமிருந்தும்  தொண்டு நிறுவனங்களுக்கு  நன்கொடை என்ற பெயரில் இருமுறை பணம் வசூல் செய்துள்ளதும் அதையும் தோடு நிறுவனங்களுக்கு கொடுக்காமல் இந்த நபரே பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

இந்த முறைகேடுகளுக்கு ஒரு வகையில் ஹெல்த் கனடாவின் மெத்தனப் போக்கும் காரணம் என்றும் கூறப்படுகிறது. நிதி நெருக்கடியில் இருந்த சம்பந்தப்பட்ட நபரின் கைவசம் கடன் அட்டைகளை நிர்வாகம் கொடுத்திருக்கக் கூடாது என்றும் மேலும் 60 முறை பல்வேறு இடங்களில் அதனை அவர் பயன்படுத்தியதையும் ஹெல்த் கனடா கவனிக்காமல் போனது எப்படி என்ற கேள்விகளையும் கணக்குத் தணிக்கையாளர்கள் எழுப்பியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி ஊழியர் ஏற்படுத்தி விட்டு வைத்துள்ள $11,210 கடன் தொகையை வங்கிகளுக்கு  திரும்பச் செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஹெல்த் கனடா தள்ளப்பட்டுள்ளது. மேலும் இத்தொகையை சம்பந்தப்பட்ட ஊழியரின் சம்பளத்திலிருந்தே பிடித்தம் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் யோசித்து வருகின்றனர் உயரதிகாரிகள்credit-cards-canadian-press-ryan-remiorz-620
ideal-image

Share This Post

Post Comment