அரநாயக்கவில் மண்சரிவு – 150 குடும்பங்கள் புதையுண்டுபோயின!

aranayakkaஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தின் மானவெல்ல அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரில் 150குடும்பங்கள் புதையுண்டுபோனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 80பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அடைமழை தொடர்ந்து பெய்துவருவதால் மீட்புப்பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதையுண்ட அனைவரும் இறந்திருக்கலாம் என காவல்துறை தெரிவிக்கின்றது.

மாவனெல்ல அரணநாயக்க பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிறிபுர பல்லேபாகே மற்றும் அலிங்கிபிட்டிய ஆகிய கிராமங்களே புதையுண்டுள்ளன. இதில் பல்லேபாகே தமிழ் மக்கள் வாழும் இறப்பர் தோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் மழையினால் மண்சரிவுகளும் தொடர்ந்தவண்ணமுள்ளன. மீட்புப் பணிக்காக அனுப்பிவைக்கப்பட்ட காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லமுடியாது தடைப்பட்டிருப்பதாக இரத்தினபுரி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் தெதிவித்துள்ளார்.

Share This Post

Post Comment