அபுதாபியில் அல்லலுறும் இலங்கையர் உள்ளிட்ட 100 தொழிலாளர்கள்

ekuruvi-aiya8-X3

aputhaவேலைக்கான அனுமதியை புதுப்பிக்க, முதலாளிமார் மறுத்த நிலையில், சுமார் 100 தொழிலாளர்கள் அபுதாபியில் நிர்க்கதியாகியுள்ளதோடு, மீளவும் தாயகம் திரும்ப தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளதாகவும், செய்திகள் வௌியாகியுள்ளன.

இவர்கள் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கயாதி ஊழியர் முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 15 ஊழியர்கள் இவ்வாறு உள்ளதாக, பிரபல ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

மேலும், குறித்த செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஊழியர்கள் “எமது ஊழியர்களின் ஒப்பந்தம், வீசா, ஊழியர் அட்டைகள் மற்றும் வதிவிட அடையாள அட்டைகள் என்பன காலாவதியாகியுள்ளன, ஆனால் எமது அனுசரணையாளர்கள் அதனை புதுப்பிக்கவில்லை, உரிய சம்பளம் இன்றி வேலை செய்ய வற்புறுத்துகின்றனர்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இதேபோல் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுமார் 100 ஊழியர்கள் அங்குள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் இவ்வாறு சம்பளம் இன்றி தாம் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுஇவ்வாறு இருக்க, நாம் இந்த விடயம் பற்றி அறிந்து எமது அவதானத்தை செலுத்தியதோடு, குறித்த கம்பனிகளுக்கு ஊழியர்களின் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்குமாறும், அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளோம் என, அடையாளம் காட்ட விரும்பாத இந்திய வௌிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment