வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தடையாக தென்னிலங்கை இனவாதிகளே காரணம்!

Facebook Cover V02

Vijaiyakala-720x480யுத்தத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எமக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியைக்கூட எம்முடன் கலந்தாலோசிக்காது, மத்தியில் உள்ளவர்களைக் கொண்டு வடக்கு மாகாணத்தவர்களைப் புறக்கணித்து வந்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தியை தெற்கு மாகாணத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளமுடியாது. அதற்கான அனுமதியை வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களும் வழங்கமுடியாது. தமிழ் மக்களினால் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மாகாணத்துக்கு உதவிகளைச் செய்ய விருப்பம் தெரிவித்துவரும் நிலையில் அதனை தெற்கில் உள்ள இனவாதிகள் குழப்புகின்றனர்.

இதனால் நல்லாட்சியின் உதவிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் வடக்குக் கிழக்கு மக்களுக்குக் கிடைப்பதில்லை. நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பதற்கு ஒரே காரணம் தென்னிலங்கையின் இனவாதிகளே.

வடக்கில் உள்ள மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டால், அவர்களுடைய அரசியலை நடாத்தமுடியாது என்பதே இதற்கான காரணம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment