யாழ். நகர அபிவிருத்தி, தமிழரசுக்கட்சியைத் தவிர முதலமைச்சர் உட்பட அனைத்துத் தமிழ்கட்சிகளும் புறக்கணிப்பு!

ekuruvi-aiya8-X3

jaffna-1-720x480யாழ் நகர அபிவிருத்தி தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று முற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் நடைபெற்றது.

55மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நகர அபிவிருத்தி சபையினூடாக இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே வடக்கு மாகாணசபையில் கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், இன்று இதுகுறித்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலை வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய வடக்குமாகாண சபையினரும் புறக்கணித்திருந்தனர். ஆனால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியயை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment