மூன்று கைதிகளினதும் நிலை கவலைக்கிடமாகியுள்ளதால் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதி!

ekuruvi-aiya8-X3

anurathapura-jail-720x480உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளினதும் நிலை கவலைக்கிடமாகியுள்ளதால் அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து பலாத்காரமாக அவர்கள் மூவரும் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அiழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவரினதும் நிலை கவலைக்கிடமாக உள்ளதென சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமது வழக்கை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றாவிட்டால் தாம் திங்கட்கிழமையிலிருந்து மருத்துவ வசதிகளையும் புறக்கணிக்கப்போவதாக மூன்றுஅரசியல் கைதிகளும் அறிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment